பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்திக் குத்து! ஒருவர் பலி !
பிரான்ஸில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையத் தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ் கட்டிடத்தின் அருகே மர்ம நபர் ஒரு வர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் காயம் அடை ந்தவர் களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பொலிசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? கார ணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதுவும் தெரிவிக்கப்பட வில்லை.