Breaking News

ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதிப்பு.!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித் துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாண்டு இறுதிக்குள் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் முன் வைக் காது விட்டார் அவர் தலைமையி லான ஸ்ரீலங்கா வின் தற்போதைய தேசிய அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை தமிழ் தேசியக் கூட் டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றும் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளாா். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இத் தகவல்களை முன்வைத்திருக்கின்றார். 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவூ காயான்மடு அர சினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட் டரங்கு திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்றது. 

மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலையான வவூணதீவூ காயான்மடு அர சினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீண்டகால தேவையாக இருந்த விளை யாட்டரங்கு தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் 10 இலட்சம் ரூபா செல வில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய நேற்றையதினம் பாடசாலை அதிபர் திருநாவூக்கரசு தலைமை யில் நடைபெற்ற திறப்பு விழாவின் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட் டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனே கலந்துகொண்டு திறந்து வைத்தார். 

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசின் இருப்பினை தக்கவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமை ப்பு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக ஏற்றுக்கொண்டதுடன், அத ற்கும் ஒரு வரையரை இருப்பதாகவும் தெரிவித்தார். 

தமிழ் மக்கள் உட்பட தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்ப தாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஸ்ரீலங்கா அரசு கைவிட்டால் சர்வதேச சமூகத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.