முன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் (காணொளி)
விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள்
போராளியின் வீட்டில் விமானப் படையினரால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டிலேயே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த அகழ்வு பணியானது விமானப்படையினர், விசேட அதிரடிப்படையினர், தர்மபுரம் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நில மட்டத்திலிருந்து சுமார் ஆறு அடி ஆழத்தில் பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து பாவிக்கக்கூடிய வகையிலான பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்ட வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து என்பன மீட்கப்பட்டுள்குள்ள என தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.