Breaking News

ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக.!

இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்க ளில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கை யில் நிரந்தர சமாதானத்திற்கும் அபிவி ருத்திக்கும் வழிகோலும் என ஐரோப் பிய ஒன்றியம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்கும் முகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன் பிடித்தடையை நீக்கியதன் காரணமாகவும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.