Breaking News

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல் ஆரம்பம். !

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினமும் (07-05-2018) வாள்வெட்டுக் கும்பலால் இருவர் வெட்டப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களாக ஓய்ந்திருந்த வாள் வெட்டுக் கும்பல்க ளின் அட்டகாசம் கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரித்துள்ளது தொடர் பில் மக்கள் கவலை வெளியிட்டு வரும் நிலையிலேயே நேற்றைய தினம் நீர்வேலிப் பகுதியில் இச் சம்ப வம் நடைபெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற் றும் வெட்டுக் கத்திகளுடன் சென்ற 8 பேர் கொண்ட வாள் வெட்டுக் கும்பல் அங்கிருந்த இருவர் மீது சரமாரியாக வெட்டியுள்ளனர். 

வாள்வெட்டுக்கு பெயர் போன ஆவாக் குழுவினரே வாள் வெட்டை மேற் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ள இருவரும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித் துள்ளன.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் இந்த வாள்வெட்டு சம் பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவத்தில் ஆவா குழுவின் தலை வன் என அழைக்கப்படும் வினோத் தலைமையில் 4 மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே வாள் வெட்டை நடத்தியிருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணை கள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனா். 

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த ஆத்திரம் காரணமாகவே ஆவா குழு வின் தலைவன் என அழைக்கப்படும் வினோத் தலைமையில் இக் கும்பல் சென்று தாக்கியுள்ளமையும் தெரிய வந்துள்ளது. 

வாள்வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க் கச் சென்றவர் என்றும் இவ் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்து வருகின்ற கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள் ளனா்.