பிரதமரின் கருத்திற்கு எஸ் பி திசநாயக்க எதிர்ப்பு.!
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கியை விரைவில் மத் திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள் ளமை குறித்து கருத்து தெரிவிக்கை யிலேயே முன்னாள் அமைச்சர் இவ் வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழேயே சமுர்த்தி வங்கி இயங்குகின்றது இதன் காரணமாக இதனை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரமுடியாது என வும் சமுர்த்தி சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் மூன்றின் இரண்டு பெரும்பான்மை அவசியமென முன் னாள் அமைச்சர் பிரதமருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியை பட்டப் பகலில் கொள்ளையடித்தார்கள் நாங்கள் ஏழை மக்க ளின் பணத்தில் பிரதமர் கைவைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் எனவும் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்திய வங்கியை தற்போது நம்பு வதில்லையெனவும் தெரிவித்துள்ளாா்.