மகிந்த அணிக்குள் குழப்பமென - விக்கிரபபாகு கருணாரட்ன.!
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்சவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ராஜபக்ச அணிக்குள் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக கலாநிதி விக்கிரமபாகுகருணாரட்ன தெரி வித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தால் அது மீண்டும் அதிகாரத்திற்கு வரும் மகி ந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பை பாதிக் கும் என்பதால் மகிந்த ராஜபக்சவும் அவரது நண்பர்களும் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்க்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றாலும் தான் அதிகாரத்திற்கு வருவதை இது பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்ச இதனை எதிர்க்கின்றார், இதன் காரணமாக மகிந்த அணிக்குள் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனக்கு வழிவிடக்கூடிய ஓரு வரை நிறுத்தவேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு உள்ளது.
மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதற்கு அவசியமான அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடிய ஒருவரையே அவர் ஜனா திபதி வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றார்.
இதேவேளை அதிகார ஆசை இல்லாதவராகவும், மகிந்த ராஜபக்சவினால் இல குவாக கையாளப்படக்கூடியவராக உள்ள அவரது மூத்த சகோதரர் சமல் ராஜ பக்சவை நிறுத்த வேண்டுமென மகிந்த அணியை சேர்ந்த சிலர் விரும்பு கின்றனர்.
இதேவேளை பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கவரக்கூடிய கோத்த பாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நிலைப் பாடும் மகிந்த அணிக்குள் காணப்படுகின்றது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சேறு பூசும் பிரச்சாரமும் இடம் பெறுகின்றது என விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.