பிரதமர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டுமென்கிறாா் - மாவை.!
வடக்கில் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கின் அபிவிருத்திகள் குறி த்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரி வித்துள்ளாா்.
பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினர் அவரை சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தி ருந்தனர். இதன்போதே வடக்கின் காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்திகள் முன்னெடுப்பு குறித்து பிரதமர் தமிழ்த் தரப்புக்கு வாக்குறுதிகளை வழங்கியி ருந்தார்.
இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டம் எவ் வாறு இருக்குமென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இன்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொது மக்களின் காணிகள் விடு விக்கப்படாத நிலையில் உள்ளது. அதேபோல் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியா வின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானம் எடுக்கப் பட்ட போதிலும் இன்றும் கடற்படை மற்றும் விமானப்படை வசமே அக் காணி கள் உள்ளன.
ஆகவே வடக்கின் அபிவிருத்தி, காணிவிடுவிப்பு, அபிவிருத்தி பணிகள் முன் னெடுப்பு குறித்து பிரதமர் எமக்கு வழங்கிய வார்த்தைகள் வெறும் வாய் வார்த் தைகளாக அமைந்துவிடக் கூடாது எமது மக்களை பாதுகாக்கும் மக்களின் வாழ்க்கையை பலப்படுத்தும் வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.
அதேபால் வாக்குறுதிகளை நாம்பி நாம் அமைதியாக இருக்கப் போவது மில்லை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து எமது மக்க ளின் நலன்களை வெற்றி கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.