Breaking News

கிளிநொச்சி - முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு.!

முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத் தில் தகரம் ஒன்று இருப்பதனை அவ தானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்து கிராம சேவையாள ருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். 

குறித்த பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவை கள் அடங்கிய ரவைப் பெட்டிகள் நாற்பது  போன்றவற்றைக் கைப்பற்றியுள்ள னா் என்பது குறிப்பிடத்தக்கது.