Breaking News

முன்னாள் போராளியின் மகனைக் காணவில்லையென முறைப்பாடு!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – சிவநகரினை சேர்ந்த 16 வயதுடைய மாண வனை காணவில்லையென மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அருமைதாஸ் மதுசன் என்ற மாண வன் முல்லைத்தீவு பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 27 ஆம் திகதி சென்று இரண்டு வாரங்களாக வீடு திரும்பாத நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் போராளியான குறித்த மாணவனின் தந்தை காணாமல் போனதை அடுத்து தாய் பல்வேறு போரா ட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரது தந்தை தொடர்பில் மக னிடம் விசாரணை செய்து வந்துள்ளார்கள் எனவும், ஆனால் தனது மகன் சிலா வத்தையில் உள்ள உறவினர்களின் வீட்டிற்குச் செல்வதாக சென்றவன். 

தற்போது காணவில்லையென தாயார் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விடையம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் முறை யிட்டுள்ளதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.