Breaking News

கோட்டாபய ராஜபக்ச எப்போதும் ஜனாதிபதியாக ஆகப் போவதில்லை!

ஸ்ரீலங்கா வரலாற்றில் ஜனாதிபதிகளை நியமிக்கும் தீர்மானமிக்க சக்தியாக தமிழ் மக்கள் விளங்குவதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதனால் முன் னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒருபோதும் ஜனாதி பதியாக முடியாதென ஆணித்தரமாக தெரிவித்துள்ளது. 

சுதந்திரக் கட்சியின் மே தின மேடை யில் வட,கிழக்கு முன்னாள் முதல மைச்சர் வரதராஜப்பெருமாள் கலந்து கொண்டு உரையாற்றியமை தொடர் பாகவும் சுதந்திரக் கட்சியின் நேற் றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தொழிற்சங்கமாக விளங்குகின்ற சுதந் திரக் கட்சியின் இளைஞர் தொழிற்சங்கவாதிகளின் சங்கம் ஏற்பாடு செய்தி ருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக தென்னிலங்கை அரசியற்களம் உட்பட பல பகுதிகளிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பா ளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என்று கடந்த மே தினக் கூட்டத்தில் அறி விக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2020ஆம் ஆண்டில் ஓய்வு பெறப்போவதில்லை என்ற அறிவிப்பை விடுத்தமை பெரும் விமர்சனத்தில் விமா்சிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின் நிறைவேற்று தலைவரான சட்டத்தரணி ரஜித கொடிதுவக்குவிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். நான் உங்களிடம் கேட்கின்றேன்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என நினைக்கிறீர்களா? அன்று போருக்குப் பின்னர் 62 வீத சிங்கள பௌத்த மக்க ளின் வாக்குகள் இனி ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. யுத்தத்தை முடி வுக்கு கொண்டுவந்த காரணத்தினால் பௌத்த சிங்கள மக்கள் மஹிந்த ராஜ பக்சவுக்கு வாக்களித்தார்கள்.

மஹிந்த ராஜபக்ச தென்னம்பொச்சு சின்னத்தில் போட்டியிட்டாலும் அதற்கும் வாக்களிக்க மக்கள் தயார் என்றுதான் பேசப்பட்டது. அதுபோல மஹிந்தவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதன் பின்னர் அது நடக்கவில்லை. பிரி வுகள் ஏற்பட்டன. தெற்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறுவ தற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு முடியும்.

ஆனால் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக முடியாது. எனினும் அவர் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி. கோட் டாபய ராஜபக்ச மீது இல்லாத சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகிறது.

பௌத்த மக்களின் ஓரளவு வாக்குகளைப் பெறும் சக்தியும் அவருக்கு இருக் கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் பார்க்கின்றோம்.

அடுத்த தலைவர் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவின் வரலாற்றில் அத்தனை ஜனாதி பதிகளையும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்களின் வாக்குகள் அமைந்துள் ளன. உண்மையை தெரிவிக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரும்வரை தென்னிலங்கையில் நாங்கள் வென்றோம்.

ஆனால் போர் முடிந்த பின்னர் அந்த மக்கள் வாக்களித்த ஆரம்பித்ததால் ஏற் பட்ட மாற்றத்தை நாம் அறிகின்றோம். அவர்கள் சிறுபான்மையினர் அல்லர். எமது நாட்டுப் பிரஜைகள். அவர்கள் இனம் வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களே இந்த நாட்டின் தீர்மானமிக்க சக்திகளாகும்.

இதனை நாங்கள் தான் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பொய்கூறுவதில் பயனில்லை இதேவேளை வட,கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மே தின மேடைக்கு அழைக்கப்பட்டு உரை நிகழ்த்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் பின்னணியில் தமிழ் மக்களின் வாக்குகளை வசூழிப்பதற் கான திட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் ஊடகவியலாளர்கள் இதன்போது வினாவை  எழுப்பினாா். 

வரதராஜப் பெருமாளின் உரையினால் தமிழ்,முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்க ளிப்பார்கள் என நம்புகிறீர்களா? அப்படியென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.வி.பியினர் ரஷ்யாவிலிருந்தும், கியூபாவிலிருந்தும் பேச்சாளர்களையும், அதிகாரிகளையும் இங்கு அழைத்து உரையாற்ற வைக்கின்றனர்.

இந்நிலையில் எமது நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்களா? அன்று கிழக்கில் 700க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொலை செய்த கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் உப தவிசாளராக நியமித்து, பிள்ளை யானை முதலமைச்சராக நியமிக்க அன்றைய அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தால் இப்போது ஜனநாயக ரீதியில் மக்களின் ஐக்கியம், நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கு ஒருவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில் பிழை இருக் கிறதா?