Breaking News

புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் - மாவை குற்றச்சாட்டு.!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப் படையிலான தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை தயா ரிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீள ஆரம்பிக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் முன் வைக்கப்பட்ட இடைக்கால அறி க்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெற்கில் மஹிந்த அணியினர் பிரசா ரப்படுத்தி வரும் நிலையில், தமிழர் தாயகத்திலுள்ள சில தமிழ் கட்சிகள் இடைக்கால அறிக்கையால் தமிழ் மக் களுக்கு எதுவும் கிடைக்காது என்று பிரசாரம் செய்து வருவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குற்றம் சுமத்தியுள்ளார். 

எனினும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை க்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று கிடைக்குமென நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவிக்கும் மாவை சேனாதிராஜா அதனாலேயே அப் பணி களை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்குமாறு ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடு த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்த லில் யாழ் மாநகர சபைக்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கம் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (06-05-2018) பாசையூரில் நடைபெற்றுள்ளது. 

தந்தை செல்வாவின் சதுர்க்கத்திற்கு மரியாதை செலுத்திய உறுப்பினர்கள் மற் றும் இலங்கைத் தமிழரசுக்க கட்சியின் தலைவர்கள் பகின்னர் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்திற்கு ‘பாண்ட்’ வாத்திய இசையூ டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். 

இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஸ்ரீலங்காவின் தற் போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசுடன் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு இணைந்து செயற்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளாா். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி அவர்களும், ரணில் சொல்லியிருக்கி ன்றார்கள் நடந்த முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்து ஸ்ரீலங்கா வின் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சிக்கும் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் குழ ப்ப நிலைகள் காரணமாக புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக் கப்பட்டுள்ளன. 

எனினும் இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் தலைவர்கள் இருவரும் தமக்கு உறுதியளித் துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளாா்.