யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மே 18 நிகழ்வை அனுஷ்டிக்க முன்வந்தமை பெருமிதம்.!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை இம்முறை முள்ளிவாய்க்கால் மக்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ் டிக்க முன்வந்ததையொட்டி பெரும் மகிழ்ச்சியடைவதாக மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் தலைவர் சி.இ.அற்புதராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்தபோது,
இம்முறை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முடிவடைந்த தும். மீள அடுத்த வருடம் மே 18 வரை க்கும் எதுவித கருத்துக்களும் இல் லாது, இருக்காது தொடர்ந்து அங்கு விடுபட்ட எச்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போதைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகம் மாறிப்போனாலும் இம்முறை அனுஷ்டிக்கப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிக ழ்வு தொடர்ந்தும் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், இவர்களுக்கான முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டுமென புதுக்குடியிருப்பு மாற்றத்துக் கான இளைஞர் அமைப்பின் தலைவர் சி.இ.அற்புதராசா அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.