அரசாங்கத்திற்கு எடுத்து கூறுவது தங்களது கடமை - சி.வி.விக்னேஸ்வரன்
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலை கொண்டுள்ளமை குறித்து வார த்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கி யுள்ள பதிலில் இதனைத் தெரிவித் துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில்,
அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என் பது தவறான சிந்தனை.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், படைத்தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் படைத் தரப்புக்கும் எடுத்துக்கூறுவதே தங் களது கடமை என தெரிவித்துள்ளார்.
ஏனையோர்களுக்கு அஞ்சி தமது மனோ நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறாமல் இருந்தோமானால் ஏன் என்று கேட்க முதலே வடக்கு கிழக்காய் மாறிவிடும்.
படையினர் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணியை வட மாகாணத்தில் தம்வசம் வைத்துள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தளவு இல்லை என கூறப்படுவதாகவும், புள்ளி விபரங்கள் ஒருவருக்கொ ருவர் மாறுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை சிறிது சிறிதாகத் மீளக் கையளித்து வரும் காணிகள் தனி யாருக்குச் சொந்தமான காணிகளே. அவற்றை விட பண்ணைகள், அரசாங்கக் கட்டடங்கள், சனசமூக நிலையங்கள், அரச காணிகள், காடுகள் போன்ற பல வும் படையினர் வசம் உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.