கிரிக்கெட் வீரரின் தந்தை துப்பாக்கிச் சூட்டினால் பலி.!
ரத்மலானை பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்ப வத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்சய டி.சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 63 வயதுடைய கே. ரஞ்சன டி.சில்வா என்பவேர இவ்வாறு துப்பாக்கிச் சூட் டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் தெஹிவளை, கல்கிஸை மாநகர உறுப்பினராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இச் சம்பவத்தின் போது மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.