நாளை எம்மை நோக்கியும் துப்பாக்கி முனை திரும்பலாம் விழித்திடு தமிழா.!
தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெ டுத்து வந்துள்ளனா்.
கடந்த 99 நாட்களாக அறவழியில் யாருக்கும் எத்தகைய தீங்கும் இழை த்திடா மல் போராடி வந்த மக்கள், நேற்றைய தினம் ஆட்சியர் அலுவல கம் நோக்கி பேரணியாகச் சென்று ஆலையை மூடுமாறு மனு கொடுக்க சென்றனர்.
ஆனால், இதுவரையில் அம்மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்திடாத தமி ழக அரசு, அம்மக்கள் அனுமதியின்றி கூடுவதாக தெரிவித்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் அநியாயமாக 12 பொதுமக்களை சுட்டு வீழ்த் தியது.
உங்கள் வாழ்வாதாரத்தினை காத்திட நீங்கள் களம் காணுவீர்களேயானால், உரிமைக்காக குரல் எழுப்புவீர்களேயானால் நிச்சயம் நீங்கள் காவல்துறை யால் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள் என்று தொடர்ச்சியாக நீட், காவிரி மேலா ண்மை வாரியம் உள்ளிட்ட தமிழக வாழ்வாதார விடயங்களுக்காக போராடி வரும் தமிழக மக்களுக்கு தெரிவித்திடவே இப்படியோர் படுபாதகமான செயலை அப்பட்டமாக அரங்கேற்றியுள்ளது.
அடிமை எடப்பாடி அரசும் - காவல்துறையும்.
தவறாக தீர்பளித்தமைக்காக உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியன், வாடிய பயிரை கண்டபோதெல் லாம் வாடினேன் என செடி, கொடிகளுக்காகவும் உருகிய வள்ளலார் இவர்க ளெல்லாம் வாழ்ந்து மறைந்திட்ட இதே மண்ணில்தான் மக்களாட்சி என்ற பெயரால் அப்பட்டமான படுகொலைகளை மேற்கொண்டுள்ளது.
காவல்துறை.
இனியும் நாம் முடங்கிக்கிடப்பதில் பயனேதுமில்லை, இன்று நம் சகோதரனுக்கு எதிராக நீட்டப்பட்ட துப்பாக்கிகள் நாளை நமக்கு எதிரா கவும் நீளும். ஆகவே, கரம் இணைவோம். அதிகார வர்க்கத்தின் குலை நடுங்க களம் காண்போம். வெல்லட்டும் மக்கள் புரட்சி.