முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் தியாகங்கள் வீண்போகாது என்கிறாா் எம்.ஏ.சுமந்திரன்!
ஒன்பது வருடங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்கள் வீண்போகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விவரித்துள் ளார்.
மேலும் தெரிவித்ததாவது.,
"தமிழ் மக்களின் தியாகங்களுக்கான பிரதிபலன் வரப்போகின்ற சந்ததிகளு க்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொட ர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை எம் மக் களோடு இணைந்து துக்க தினமாக அனு ஷ்டித்தது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் செய்த அளப்பெரிய தியாகங்களுக்கான பிரதி பலன்கள் வரப்போகின்ற எமது எதிர்கால சந்ததியினருக்குப் பூரணமாகக் கிடைக்க வேண்டும்.

இத் தியாகங்கள் வீண் போகாமல் நீதியோடும் நியாயத்தோடும் சம உரிமை களோடு எங்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் தீர் வொன்றைப் பெற்றுவாழ்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமை யான அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படும்" என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.