சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் மோதல்! 11 பேர் பலி!
வெனிசுலாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோத லில் 9 கைதிகள் 2 காவலாளிகள் என 11 பேர் பலியாகியுள்ளனர்.
வெனிசுலா நாட்டின் லாரா மாநில த்தில் பெனிக்ஸ் சிறைச்சாலை அமைந்துள்ளதுடன் இந்த சிறைச்சா லையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர் ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதி கள் ஒருவருக்கொருவர் கொரடூரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கலவரத்தில் 9 கைதிகள், 2 காவலர்கள் என 11 பேர் உயி ரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை கரகஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளனா்.