Breaking News

சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறையீடு செய்ய நடவடிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப் பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பி னரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். 

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை ப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பி னர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிர திநிதித்துவப்படுத்துகின்றனர். “எனி னும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள் ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்” என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரி வித்துள்ளனர். 

எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர் வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித் துள்ளது.