Breaking News

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்.!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்திய ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதி மன்ற அமர்வில் கடமையா ற்றியதன் அடிப்படையில் நாடு முழு வதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றநீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திரு கோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். திருகோண மலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். 

வவுனியா மேல் நீதிமன்றநீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறிநிதிநந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நிய மிக்கப்படுகிறார். சட்டமா அதிபர் திணைக்களமூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்புகுடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகர னும் கடமையாற்றவுள்ளார்.