முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக - யாழ் மாணவா்களுடன் இணையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்படும் முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாதென தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் நடத்தப் படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குவ தாக தெரிவித்துள்ளனா்.
முள்ளிவாய்க்கால் கொடூரம் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 18 பேரவலத்தை நினைவு கூரும் பிரதான நிகழ்வை தாமே நடத்த வேண்டுமென வட மாகாண சபையும் பல்கலைக்கழக சமூகத்தினரும் பர ஸ்பரம் உரிமை கோரிவரும் நிலை யில் தமிழ் தேசிய மக்கள் முன்ன ணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இத் தகவலைத் தெரிவி த்துள்ளாா்.
இதேவேளை தமிழ் இனத்தின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டுமென உயர்ந்த நோக்கத்துடனேயே முள்ளி வாய்க்கால் நினைவேந் தல் நிகழ்வை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மாணவர்களின் தூர நோக்குடனான செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த முனையக் கூடாதென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.