'தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை' - சுமந்திரன்
தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக் கப்படுவதை தான் முற்றாக எதிர்க்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யு மாறு வலியுறுத்தியதாக சிங்கள ஊட கங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து இன்றைய தினம் சிங்களத்தில் அனுப்பி வைத்துள்ள அறிக்கை யொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கீ.துரைராஜசிங்கத்துடன் இணைந்து கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
தமிழர் தாயகத்தில் புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஊடகவியலா ளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வினாவிய போது இவ்வா றான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக அவர் பதிலளித்திருந்தார்.
சுமந்திரனின் அக் கருத்துக்கள் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மே மாதம் ஏழாம் திகியான நேற் றைய தினம் திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள சிங்கள மொழியிலான அறிக்கையில் வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யுங்கள் என்று தான் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியிடப்பட் டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தான் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தி பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் வகையில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளாா்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை விரிபுபடுத்தி சோடிக் கப்பட்ட செய்திகளை பிரசுரிப்பதன் ஊடாக சமூகங்களுக்கிடையில் மோதல் களை தூண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள் சுமந்திரன் இவ்வாறான செய்திகளை பிரசுரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் திரிபுபடுத்தப்பட்ட செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் சரியான செய்தியை பிரசுரிப்பதுடன் தான் வெளியிட்டுள்ள அறி க்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் ஊடகங்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தி யுள்ளார்.
வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடை செய்யுமாறு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்ட காணொளி: