இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப தவறியுள்ளதாக மைத்ரி புலம்பல்.!
நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டி யெழுப்புவதற்கு முறையான செயற் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் பகிரங்மாக ஏற்றுக் கொண் டுள்ளார்.
தமிழர் தாயகத்தின் மட்டக்களப்பில் நேற்றைய தினம் (07-05-2018) நடை பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்த உண்மையை ஏற்றுள்ளாா். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் நேற்றைய தினம் (07-05-2018) மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பகுதியிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக் கட்சியின் முக் கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக் கட்சியின் முக் கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந் திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு வில் நடைபெற்றுள்ள சிலர் நேற்றைய மே தினக் கூட்டத்தை பகிஸ்கரித்துள் ளனர்.
எவ்வாறாயினும் சுதந்திரக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா அரச தலைவர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பகிரங்க அழை ப்பு விடுத்துள்ளாா்.
🔺. ஸ்ரீலங்கா அரச தலைவர்
எமது நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாது தடுப்பதற்காக சகல இன மக் கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான செயற் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எம்மால் இன்னமும் முடியாது போயுள் ளது.
யுத்தத்தினாலோ அல்லது துப்பாக்கிகளினாலே பிரச்சனைகளுக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது. மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண முயல வேண்டும். அதுதான் முன்னேற்றமடைந்த சமூகத்தின் கடப்பாடு.
அதற் காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் உண்மையாக உழைக்க முன்வர வேண்டும். அர்ப்பணிப்பை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதிகாரத்தை கைப்பற்ற லாம். இன்று சிலர் அதிகாரத்திற்காக மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டி யெழுப்புவதற்கான திட்டங்களை முன்வைக்கவோ நடைமுறைப்படுத்தவோ இல்லை.
அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசியல்வாதிகள் இடத்தில் இவற்றுக்கான செயற்திட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்க விரும்புகின் றேன்.
வடக்கைச் சேர்ந்த இளைஞர்களோ அல்லது தெற்கைச் சேர்ந்த இளைஞர் களோ மீண்டும் ஆயுதம் ஏந்தாது இருக்கக்கூடிய சூழலை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காகவே எமது அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டு காலமாக உழைத்து வருகின்றது.
அதற்காக பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி யுள்ளோம். அவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
அதனால் அவற்றை பலப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதற்கு எமக்கு அனைத்து அரசியல் கட்சிக ளும், தொழிற்சங்கங்களும் உண்மையாக ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடை பெற்ற இந்த மே தினக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா அரச தலைவர், 2020 க்குப் பின்னரும் தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளாா்.
2020 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறுவீர்களா என்று சிலர் என்னிடம் கேட்கின்ற னர். கடந்த சில நாட்களான இணையத் தளங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களிலும் நான் 2020 உடன் ஓய்வில் செல்லப்போவதாக செய்திகளை பரப்புகின்றனர்.
நான் 2020 ஆம் ஆண்டுடன் ஓய்வில் செல்லப்போவதில்லை. செய்வதற்கு பல வேலைகள் எஞ்சியிருக்கின்றன. இந்த நாட்டின் உண்மையாக நாட்டையும், மக்களையும் நேசிக்கும் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்று கேட்க விரும்புகின்றேன்.
மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்காத, ஊழல் மோசடிகளில் ஈடுப டாத, கொலைகளை செய்யாத அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்ற னர். அரசியல் சண்டியர்கள் எமக்குத் தேவையில்லை.
நாட்டையும், மக்களையும் நேசிக்கும் உண்மையான அரசியல்வரிகளே தேவைப்படுகின்றனர். இன்று சிலர் 2020 ஆம் ஆண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்கப் போவதாக கனவு காண்கின்றனர்.
எமது அரசாங்கத்தில் உள்ள சில ரும் 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தொடர்பில் கதைப்பதை நான் கண் டேன்.
ஆனால் அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு நாட்டையும், மக்களையும் நேசிக்கும் அரசாங்கமொன்றை அமைக்கம் எமது முயற்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க விரும்பு கின்றேன்.
எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தான் ஒரு தடவையே ஜனாதிபதி பதவியில் இருக்கப் போவதாகவும் அதற்குப் பின்னர் இப் பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியதுடன், 2020 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதா கவும் திட்ட வட்டமாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.