Breaking News

முன்னாள் போராளிகள் இந்நாளிலும் போராளிகள் என்கிறாா் - பாஸ்கரன் (காணொளி)

போரினால் அனைத்தையும் இழந்து, பொருளாதார ரீதியாக சின்னாபின்னமா கியுள்ள தாயகத் தமிழர்களை மீளக்கட்டியெழுப்பும் கடமையும் பொறுப்பும் புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளதாக புலம்பெயர் தேசத்தில் உழைப்பினால் உச்ச இடத்தை தொட்டிருக்கும் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.


புலம்பெயர் மக்களின் குரலாக இரு ந்துவரும் ஐ.பி.சி தமிழ் ஊடக நிறு வனத்தின் தலைவரான தொழி லதிபர் கந்தையா பாஸ்கரன், ஐ,பி.சி தமிழின் சமூகப் பணிகளில் ஒன்றாக நிர்மா ணிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரி ப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு உரைத்துள்ளாா்.

தமிழ் மக்கள் தலைநிமிர வேண்டுமாயின் தமிழ் சமூகத்திற்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தான்! Gokulan 4 hours ago Print Report 32 SHARES lankasrimarket.com Image போரினால் அனைத்தையும் இழந்து, பொருளாதார ரீதியாக சின்னாபின்னமாகியுள்ள தாய கத் தமிழர்களை மீளக்கட்டியெழுப்பும் கடமையும் பொறுப்பும் புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளதாக புலம்பெயர் தேசத்தில் உழைப்பி னால் உச்ச இடத்தை தொட்டிருக்கும் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளாா். 

புலம்பெயர் மக்களின் குரலாக இருந்துவரும் ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவன த்தின் தலைவரான தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன், ஐ,பி.சி தமிழின் சமூ கப் பணிகளில் ஒன்றாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப் பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தை நேற்று திறந்துவைத்து உரை யாற்றுகையிலேயே இவ்வாறு உரைத்துள்ளாா். 

தமிழ் மக்கள் தலைநிமிர வேண்டுமாயின் தமிழ் சமூகத்திற்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். ஐ.பி.சி தமிழின் முழுமை யான பங்களிப்போடு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரா மரிப்பு நிலையமான உயிரிழை அமைப்பின் உறுப்பினர்களுக்கான கட்ட டத்தொகுதி நேற்று சனிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைத்து பரா மரிக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந் நிலையம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட 20 அறைகள் அடங்கிய இந்த பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் கடந்த வருடம் நவம்பா் மாதம் 05 ஆம் திகதி நாட்டிருந்தது. 

ஆறு மாதம் என்ற குறுகிய காலப் பகுதிக்குள் திட்டமிட்டபடி, நிர்மாணிக்கப் பட்ட இந்த நிலையத்தின் திறப்பு விழா மே 12 ஆம் திகதியான நேற்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவரான கந்தையா பாஸ்கரனின் தலை மையில் நடைபெற்ற இந்த விழாவில், பயனாளிகளான உயிரிழை அமைப் பின் உறுப்பினர்கள் திறந்துவைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டட திறப்பு விழாவின் ஞாபகாா்த்தமாக மரக்கன்றும் நாட்டப்பட்டதுடன், உயிரிழை அமைப்பிலுள்ள உறுப்பினா்களின் கலை நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றன. 

இந் நிகழ்வில் கலந்துகொண்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் பேராளிகள், தாம் அனுபவித்துவரும் கஷ்டங்களை கவிதையாகவும் உரையா கவும் விவரித்தனர். முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி கள் உட்பட, தமிழ் உறவுகளுக்காக, கடந்த சில ஆண்டுகளாக பல சேவை களை ஆற்றிவரும் ஐ.பி.சி தமிழ் நிறுவனத் தலைவர், அவர்கள் தெரிவித்த கஷ்டங்களை உறுதிப்படுத்தினார். 

இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மாத்திரமே தலைசிறந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என சுட்டிக்காட்டினார். 

உயிரிழை அமைப்பின் தலைவா் கோ.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் போதானா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் ச.சிவதாஸ், உட்பட பலா் கலந்து சிறப்பித்துள்ளனா்.