ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தினால் ஏமாற்றமடைந்தனா் யாழ் மக்கள்.!
யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுபாட்டில் உள்ள தமது பரம்பரைக் காணி கள் கையளிக்கப்படுமென எதிர்பார்த்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந் துள்ளதாக யாழ் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காணிகளை கையளி ப்பது தொடர்பாக, யாழ்ப்பாணம் செய லகத்தில், தனியான அறை ஒன்றிற் குள், படைத் தளபதிகளுடன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினர்கள் ஆகியோர் பேசிய விடயங் கள் தொடா்பாக ஊடகங்களுக்கு எது வும் தெரிவிக்கப்படவில்லை.

600 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அது தொடர்பாக யாழ் அரச அதிபர், நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், படைத் தளபதிகள் விளக் கமளித்துள்ளனா்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, சிறீதரன், சரவணப வன், ஆகியோரும் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மாத்திரமே கூட்டத்தில் பங்குபற்றினர். ஆனால், ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் கூட, காணிகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பாக அங்கு பேசப்பட்ட தகவல்கள் எதுவும் ஊடகங்களுக்கு வழங்கப் படவில்லை.

அதேவேளை, யாழ் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத் தில். அரச அதிபர் வேதநாயகன், பொதுமக்களின் காணிகளை கையளிக்க வேண்டிய தேவை தொடா்பாக விளக்கமளித்தார்.
இக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சிறீதரன், சரவணபவன், ஆகியோரும் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் செயலக அதிகாரிகளும் பங்குபற்றியுள்ளனா்.
இக் கூட்டத்திற்கு மாத்திரம், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட் டது. சுமார் மூவாயிரத்தி நானூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகள், படை யினரின் கட்டுபாட்டில் இருப்பதாகவும், அங்கிருந்து படையினர் வெளியேற் றப்பட வேண்டுமென மக்கள் பிரதேச செயலகங்கள் மூலமாக மகஜர்களை அனுப்புவதாகவும் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகன், விளக்கமளித்தபோது எடுத்துரைத்துள்ளாா்.

அதற்கு, பதிலளித்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, படையினரின் கட்டுப் பாட்டில் உள்ள காணிகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்திற்குச் சென்ற நோக்கத்தை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்றும் அங்கு வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு, தென்னிலங்கை அரசியலின் தற்போதைய நில வரத்தை தமிழ் மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என்பது குறித்து அறிந்து கொண்டதாகவும் யாழ்ப்பாண தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடைகளில் ஐஸ்கறிம் குடித்தமை அந்தக் கடைகளுக்கு சென்றிருந்த மக்களை சந்தித்து பேசி, படங்கள் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டமை, வீதியில் இறங்கி மக்களை சந்தித்து உரையாடியமை எல்லாமே, தேர்தலை மையமாகக் கெண்ட பிரச்சாரங்கள் எனவும் யாழ் அரச உயர் அதிகாரிகள் சிலர் கவலை வெளியிட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ளாா்.
சில வர்த்தக நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபல வர்த்தகர்களை சந்தித்து உரையாடியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங் கள் தெரிவித்த அதேவேளை, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவை சந்திக்கவில்லை.
மாறாக தனது செயலாளர் மூலமாக மகஜர் ஒன்றை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கையளித்துள்ளாா். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களே இல்லாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பயன் ஏதுவும் இல்லையென முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.