Breaking News

ரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு ஏற்பட்ட நிலை.!

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்படட ரயில்வே ஊழியரை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 


கடந்த திங்கட்கிழமை கொழும்பிலி ருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணி த்த ரயிலில் குடும்பப் பெண்ணிடம் ரயில்வே சீட்டை பரீட்சிக்கும் ஊழி யர் தகாதமுறையில் நடந்து கொண்ட துடன் ரயிலில் பயணித்த ஏனைய பயணிகளையும் தாக்க முயற்சித்துள்ளாா். 

அத்துடன் அவர் இனத்துவேசமான வார்த்ததைகளையும் பிரயோகித்ததன் காரணமாக பொலிஸார் அவரை கைது செய்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட அவர் யாழ். நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப் பட்டதுடன் நீதிவான் குறித்த நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.