இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறிய ரஜினி! (காணொளி)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க, ரஜினி காந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் தாவிக் கொண்டி ருக்கின்றது.
மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அதில் இளைஞர் ஒருவரிடம் நடிகர் ரஜினி கலந்துரையாடும் காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ரஜினி வந்த போதும் எந்த பரபரப்பும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழும் இளைஞர், ஆமா நீங்க யாருங்க? என ரஜினியிடம் கேட்கிறார்.
அதற்கு ரஜினி, நான் ரஜினி சென்னைல இருந்து வந்திருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்.
அதற்கு மீண்டும் அந்த இளைஞர், 100 நாளா நாங்க போராடும்போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துச்சோ என கேள்வி கேட்க, பதிலேதும் சொல்லாமல் சிரித்த படி முகம் வெளிறிய நிலையில் ரஜினி வெளியேறுவதாக அந்த காணொளியில் காட்சிகள் பதிவாகியுள்ளன.