பிழைகளை ஏற்காது விடின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென்கிறாா் - ப. சத்தியலிங்கம்.!
எமக்கு நடந்த பிழைகளை ஏற்காது விடின் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற் படுத்த முடியாதென வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரி வித்துள்ளார்.
வருடாந்த குறித்தொதுக்கப்பட்ட நிதி யில் இருந்து வாழ்வாதார உதவி களை வவுனியா கால்நடை அபிவிரு த்தி திணைக்களத்தில் வைத்து பயனா ளிகளுக்கு வழங்கி உரையாற்றுகை யில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”எங்களுடைய மக்கள் நீண்ட கால போரில் பலவற்றை இழந்ததுடன் இறுதி யுத்தத்தில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டதுடன் எங்களது சொத்துக்களும் முழுமையாக அழிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில்தான் எமது மாகாணசபை இவ்வாறான வாழ்வாதர உதவிகள் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது.
கடந்த நாட்க ளில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலே நடைபெற்றது.
இந் நிகழ்விற்காக வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து இறுதி யுத்தத்திலே இறந்த தமது உறவுகளிற்கு இறுதிக்கிரியைகள் செய்ய முடியாத வர்கள் பலர் அங்கு வந்திருந்ததோடு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றார் கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் கூட அங்கு வந்திருந்தார்கள்.
இழக்க முடியாத தமது உறவுகளை இழந்த குடும்பங்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட மக்களை முள்ளிவாய்க்காலிலே நினைவுகூர்ந்திருந்தனர். இந்த நிகழ்வை கூட கீழ்மைப்படுத்தும் வகையில் தென்பகுதியில் இருந்து பல குரல் களை கேட்கக்கூடியதாக உள்ளது.
அமைச்சர் ராஜிதசேனாரத்ன, இறுதி யுத்தத்திலே பொதுமக்கள் பலர் கொல்லப் பட்டுள்ளதுடன் இம்மக்கள் கொல்லப்பட்ட பிரதேசமாக முள்ளிவாய்க்கால் காணப்படுவதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களிற்கு தமது குடும்ப உறவுகளை இழந்த மக்களிற்கு இப்படியான நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கான பூரண உரித்துள்ளதாக தெரிவித்துள் ளனா்.
இவ்வாறான தென்பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் இந்த உண்மை நிலையை ஏற்று செயற்பாட்டால்தான் இந்த நாட்டிலே ஒரு நல்லினக்கம் ஏற்படும். ஆனால் தென்பகுதியை சேர்ந்த சில அமைச்சர்களும் அரசியல்வாதி களும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றமையையே ஏற்க மறுப்பதானது இந்நாட்டிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த குந்தகமாக அமையும்.
கடந்த இரு நாட்களிற்கு முன்பு நடைபெற்ற திறப்ப விழா வைபவம் ஒன்றிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடமாகா ணத்திலே முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வானது தென்பகுதியிலே ஒரு கொதிப்பு நிலையை ஏற்ப டுத்தியதாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளாா்.
இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதோடு உலகம் அறிந்த விடயம். நாங்கள் அந்த விடயங்களை யும் நடந்த பிழைகளையும் ஏற்றுக்கொள்ளா விட்டால் நாங்கள் இந்த நாட் டிலே நல்லிணக்கத்தை கொண்டு வருவது என்பது எட்டாக்கனியாகவே இருக் கும்.
இனியாவது இறுதி யுத்தத்தில் மனித குலத்திற்கு எதிராக நடந்த விடயங்களை யும் பிழைகளையும் ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்வதற்கான முன் மாதிரி யான விடயங்களை அமைச்சர்களாக இருக்கின்றவா்களும் அரசியல்வாதி களாக இருக்கின்றவர்களும் எடுத்துச்செல்லவேண்டும்.
அங்கு பொதுமக்களே கொல்லப்படவில்லை என்றோ அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூறுவதற்கு எங்களுக்கு உரித்து இல்லையெனச் சொல்லும் அரசாங்கமாக இருந்தால் எங்களது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படு வதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் ஏற்படாது என்ற மனவருத்தமான செய் தியையும் இவ் இடத்தில் பதிவு செய்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளாா்.