Breaking News

சி.வி. விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென - பந்துல குணவர்தன

தேசிய பாதுகாப்பிற்கும் நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத் தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றும் வடமாகாண சபையினை கலைத்து, முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை கைதுசெய்ய நடவடிக்கை வேண்டுமெனக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாண முதலமைச்சரின் தலை மைத்துவத்தின் கீழ் நடைபெற்ற முள் ளிவாய்க்கால் நினைவேந்தல் தற் போது தெற்கில் உள்ள மக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. 

நினைவேந்தலின் போது நாட்டின் இறையாண்மைக்கு எதிர்காலத்தில் பாதிப் பினை ஏற்படுத்தும் சில கருத்துக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப் பிட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

அத்தோடு வடமாகாணம் தற்போது நாட்டின் பொது சட்டத்திற்கு முரணாகவே செயற்படுகின்றது என்ற விடயத்தினை ஜனாதிபதி அறியாமல் உள்ளாரா அல் லது விக்னேஸ்வரனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளாரா என்பது தெரியவில்லை. 

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தீர்மானங் களை நிறைவேற்றும் வடமாகாண சபையினை கலைத்து, விக்னேஸ்வரனை கைதுசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.