ஜனாதிபதியின் சிம்மாசன உரையில், இனப்பிரச்சினைக்கான - புதிய யாப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி நாடா ளு மன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாக ஐனாதிபதி செயலகத் தகவல் வட்டாரம் தெரி வித்துள்ளது.
சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள சிம்மாசன உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக, முக்கியமான தகவல் களை தெரிவிக்கலாமென எதிா்பாா்க் கப் படு கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 16 உறுப்பினர்கள் வெளியேறி எதிர் க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், எட்டாவது அமர்வை ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவுடன் ஒத்திவைத்தார்.
மே மாதம் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள புதிய ஒன்பதாவது அமர்வு, நல் லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வாகும். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஆனாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்வது குறித்து இரு கட்சிகளும் உடன்படிக்கை கைச்சாத்திடு வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள் ளன.
எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை செயற் படுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள் ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் இன்று திங்கட்கிழமை இரவு அல்லது நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசவுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறு கின்றது. இதேவேளை ஜனாதிபதி எட்டாம் திகதி நிகழ்த்தும் சிம்மாசன உரை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென நாடாளுமன்ற தகவல் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
சிம்மாசன உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குதிரைப் படையணியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சபைக்கு அழைத்துச் செல்லப்படுவார், சபா மண்டப வாசலில் ஜனாதிபதியை, சபாநாய கர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பிரதம கொறடா ஆகியார் வர வேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.