கரவெட்டி பிரதேச சபையை த.தே.கூட்டமைப்பு கைப்பற்றியது.!
வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கடும்போட்டிக்கு மத்தியில் தன் வசப்படுத்தியுள்ளது.
இப்பிரதேச சபையின் தவிசாளர் மற் றும் உபதவிசாளரைத் தெரிவு செய்வ தற்கான கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆனையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை சபை மண்டபத்தில் நடை பெற்றது.
இதன்போது தவிசாளர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதனின் பெயரை எஸ். வைத்தியநாதன் முன்மொழிய செல்வி எஸ்.விஜிதா வழி மொழிந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தொழிலதிபர் தங்கவேலாயுதம் ஐங்கர னின் பெயரை அதே கட்சியைச் சேர்ந்த இந்திராணி பாஸ்கரன் முன்மொ ழிய க.பரஞ்சோதி வழிமொழிந்தார். இதன்படி சபை உறுப்பினர்களின் அபிப்பிராய ங்களின்படி பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
31 உறுப்பினர்களைக் கொண்ட இப்பிரதேச சபைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 7 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பின ர்கள் 3 பேருமாக 10 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். சுதந்திரக் கட்சி உறு ப்பினர்கள் 7 பேருடன் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூவரும் ஆதரவு வழங்கினர்.
இதனால் சுதந்திரக் கட்சிக்கு 10 வாக்குகள் கிடைத்தன.
தமிழ்த் தேசிய கூட்ட மைப்புக்கு 9 உறுப்பினர்களுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரக் கட்சியை விட ஒரு வாக்கு கூடுதலாக கிடைத்த மையினால் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தங்க வேலாயுதம் ஐங்கரன் தெரிவாகியுள்ளாா்.
உப தவிசாளர் தெரிவு கோரப்பட்டபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த க.பொன்னையாவின் பெயரை அதே கட்சி உறுப்பினர் க.இரத்தினம் முன்மொழிய பா.சுதாகர் வழி மொழிந்தார்.
இப்பதவிக்கு வேறு எவரும் போட்டியிடாமையினால் அவரே உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின்போது, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனா்.