ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுங்கள்!
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை விரைவாக வெசாக் தினத்திலாவது விடுதலை செய்யுமாறு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை யின் கன்னி அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை க்கு தெரிவாகிய உறுப்பினர்களின் கன்னி அமர்வு இன்று (23-04-2018) பகல் 11.30 மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கரைச்சிப் பிரதேச சபை யினுடைய தவிசாளர் அருணாசலம் வேழ மாலிகிதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டி ருக்கின்ற ஆனந்தசுதாகரின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தாயின் அரவணைப்பை இழந்த இக்குழந்தைகளுக்கு தந்தையின் அரவணைப்பு கிடைக்கும் வகையில் சிறை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஆனந்தசுதாகரனை விடுதலை செய்ய வேண்டுமென பிரதேசசபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார் விக்ரர் சாந்தி ஆகியோர் தீர்மானத்தை எடுத்துள்ளனா்.
அத்துடன், கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கான பொது நூலக காணி விடுவிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே ஒருங்கிணைவுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக கிளி நொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் வருகின்ற மாவீரர் துயிலும் இல்லங் களை பிரதேச சபை பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தவேண்டும், தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி முதல் மொழியாக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
மற்றும் கரைச்சிப்பிரதேச சபையின் உப அலுவலமாகக் காணப்படுகின்ற கண் டாவளை தனிப்பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்டுமென மேற்படி நான்கு தீர்மானங்களும் கன்னி அமர்வில் தீா்மானிக்கப்பட்டுள்ளன.