Breaking News

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் சம்பந்தனின் பதில் என்ன ?

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இது வரை தீர்மானிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை கூடியது. எனினும் குறி த்த கூட்டத்தில் எவ்வித தீர்மான மும் எட்டப்படாது நிறைவடைந்த நிலை யில் மீண்டும் 2 மணிக்கு தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் சந்திப்பு நடை பெறுவதுடன் அதன் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமெனத் தெரிவி க்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக, எதிர்க்க ட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மாளிகைக்கு பயணமாகியுள்ளாா்.

இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொட ர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.