பொது தேர்தல் குறித்த போராட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆயத்தமாகியுள்ளது.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்திக்கொண்டு ஆட்சி தொடர் தீர்மானித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடியினை கொடுத்து பொது தேர்தல் ஒன் றுக்கான வியூகத்தை கூட்டு எதிர்க்கட்சி தயாரிக்கவுள்ளது.
இதனை மையமாக வைத்தே விஷேட கலந்துரையாடல் நாளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளாா்.