நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அமைச்சரவையில் திருப்பம்.!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அடுத்த கட்டமாக அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்ப டுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய கலந்து ரையாடலில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இத் தீா்வை தற்காலி கமாக எடுத்துள்ளதாக அரசியல் வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில் லாத் தீர்மானம் மீது நாளை புதன் கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதமாக நடத்தப்பட்டு இரவு 9.30க்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இந் நிலையில் இரண்டு தடவை ஜனாதிபதியை சந்தித்து பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க உரையாடியிருக்கின்றார்.
எனினும் இதுவரை சரியான இணக்கப்பாடு எடுக்கப்படவில்லையென தகவல் வட்டாரங்கள் விவரித்துள்ளன.
இந்நிலையில், பிரதமருக்கு எதிராக பிரேரணை வெற்றிபெற்றால் அடுத்த கட்டமாக அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யிலுள்ள உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி களை வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.