சம்பந்தன் உள்ள வரை ரணிலை அசைக்க முடியாது.!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசியலில் இருந்து அசைக்க முடியாதென தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பிரத மருக்க எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையில் மஹிந்த ராஜபக்ஷ படு தோல்வியினை எதிர்கொள்வார் என விவரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குண தாச அமரசேகர மேலும் தெளிவுப்படு த்துகையில்,
தமிழ் தேசிய கூட்டமை ப்பு ஒரு போதும் பிரதமர் ரணில் விக்ர மசிங்கவிற்கு எதிராக செயற்பட மாட் டாது.
நாட்டு நன்மை கருதாது தமது சுயநல கொள்கைகளை மாத்திரம் நிறைவேற்றி க்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நம்பி க்கையில்லா பிரேரனை விவகாரத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு எதிராகவும், ஐக் கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும் தமது தீர்மானத்தினை வெளிக்கொணரும் எனத் தெரிவித்துள்ளாா்.