புதிய அமைச்சரவையில் சம்பந்தனுக்கு இதை வழங்குங்கள் - வாசுதேவ நாணயக்கார.!
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதர வாக இரா. சம்பந்தனும் அவரது கட்சி சகாக்களும் செயற்படுகின்றனர். எனவே எதிர்க்கட்சி தலைவர் என்பதை விட புதிய அமைச்சரவையில் அமைச்சர் என் பது இவருக்கு பொருத்தமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணய க்கார தெரிவித்துள்ளாா்.
தேசிய அரசாங்கத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்தமை பாராளுமன்ற பாரம் பரிய முறைமைகளுக்கு முரனானதா கவே தென்படுகின்றது.
2015ம் ஆண்டு தொடக்கம் பிரதம ருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு அரசாங்கத்தின் பங் காளியாக எதிர்க்கட்சி தலைவர் இடம் பிடித்துள்ளமை எதிர்க்கட்சி பதவிக்கு எதிரானதாகவே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தம்சப்படுத்திக் கொள்ளும் போட்டியை மஹி ந்த தரப்பினர் மீண்டும் ஆரம்பித்துள்ளமை தொடர்பில் விவரிக்கையில் இவ் வாறு விவரித்துள்ளாா்.