தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு – சந்திரகுமார்.!
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார் த்தே உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில மீட்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி - இர ணைதீவு மக்களை முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திர குமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பினரும் சந்தித்துள்ளனர்.
இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,
வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் கொள்ளைகள் தமிழரசு கட்சியிலிருந்து வேறுபடும் பட்சத்தில் அனைவரும் இணைந்து கலந்துரையாடுவோம் என தெரிவித்துள்ளாா்.