Breaking News

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தற்கொலை!

ஐதராபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல செய்தி வாசி ப்பாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி யாற்றிய  ராதிகா ரெட்டி (30). இவர் கட ந்த சில நாட்களுக்கு முன்பு தன்னு டைய கணவருடன் விவாகரத்து பெற்று, தற்போது 14 வயது மகன் மற் றும் தாயுடன் தனியாக வசித்து வரு கிறார். ராதிகா ரெட்டியின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

கடந்த சில நாங்களாகவே மனஅழுத்ததில் இருந்து வந்த ராதிகா நேற்று இரவு பணி முடிந்ததும்,10.30 மணிக்கு வீட்டின் 6-வது மாடியிலிருந்து குத்தித்து தற் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி அனுப்பினார். அங்கு மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் நன்கு அடிபட்டு உயிர் பிரிந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவரது அறையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசா ரணையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், "எனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல: என் அறிவே எனது எதிரி” என எழுதியுள்ளாா்.