ஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு! (காணொளி)
மறுசீரமைப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றி விட்டதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருபவருமான திஸ்ஸ அத்த நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மயான வாசலை நெருங்கி விட்டதாக தெரி வித்த திஸ்ஸ அத்தநாயக்க, அடுத்த தேர்தல்களில் கட்சியின் தோல்விக்கு செயற் குழு எடுத்த முடிவுகளே கார ணமாகி விடுமெனத் தெரிவித்துள் ளாா்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து கட்சிக் குள் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் கூடி கட்சியின் பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசம், உப தலை வராக ரவி கருணாநாயக்க உட்பட தலைவர் பதவியை தவிர்ந்த சில பதவிக ளுக்காக புதிய நபர்களை றியமித்தது.
இதனிடையே செயற்குழு எடுத்த தீர்மானத்தை எதிர்த்த அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா இடைநடுவே வெளியேறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தவருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். எனினும் மலையை பெயர்ந்து சிறிய எலியை பிடித்த கதைபோல ஆகிவிட்டது. மிகப்பெரிய மறுசீரமைப்புபற்றி பேசிவிட்டு எதிர் பார்த்த ஒன்றையும் செய்யாமல் ஐக்கிய தேசியக் கட்சி மக்களை ஏமாற்றி விட்டது.
மறு சீரமைப்பு நாடு ஏற்றுக்கொள்கின்ற நடவடிக்கையில்லை. புதிய ஐக்கிய தேசியக் கட்சி, புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஓரிரு முகங்களை மட்டும் மாற்றிவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மறுசீரமைப்பை நாடு ஏற்றுக்கொள்ளாது என்பதை எனது கருத்தாகும்.
மிகவும் பலவீனமான, மக்கள் நிராகரிக்கின்ற மறுசீரமைப்பே இது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று புற்று நோய்தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு காய்ச்சலுக்கான மருந்துகளையே கொடுத்துக் கொண்டிருப்பதால் எதிர்வரும் மாகாண சபை மற்றும் ஜனாதிபதி சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியையே எதிர்கொள்ளும் என்பது உறுதியாகும்.
மயான வாசலை நோக்கி சென்றுகொண்டிருந்த கட்சியை மறுசீரமைப்பு ஊடாக காப்பாற்றுவார்கள் என நினைத்தேன். ஆனால் மயான நுழைவாயி லையும் கட்சி தாண்டிவிட்டதால் இனி எவராலுமே காப்பாற்ற முடியாது” என் றார்.
இதேவேளை அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஊடக வியலாளர்கள் வினாவைத் தொடுத்தாா்கள்.
இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்த நாயக்க, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி அரசியலையும், பலத்தையும் மிஞ்சும் வகையிலான நபர் அரசியல் உருவாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்ந பருக்கான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தாா்.
இதற்காக விரைவில் செயற்பாட்டு அரசியலில் காலடி எடுத்து வைப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தனது கருத்தை விவரி த்துள்ளாா்.
கட்சியின் உயர் பதவிகளுக்கு செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட பெயர்களைத் தவிர்ந்த அவர்களுக்கு போட்டியான எந்தவொரு நபரது பெயர் களும் முன்மொழியாத காரணத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட பெய ர்களுடைய நபர்களை பதவிகளுக்கு நியமிக்க செயற்குழு நடவடிக்கை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களை முகங்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியி லிருந்து சிறந்த இளங்குதிரைகளை தயார்படுத்தி வருவதாகவும், இனி கட்சி புதிய பாதையில் பயணிக்குமென அமைச்சா் தெரிவித்துள்ளாா்.