Breaking News

பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய அழைப்பு - ஜனாதிபதி

பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள லாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களின் தலைவர்களை சந்தித்த வேளையி லேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன இவ் அழைப்பை விடுத்துள்ளார். அரசாங்கத்தை பலப்படுத்த விரும்பு வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, எவர் வேண்டுமென்றாலும் அரசாங்க த்தில் இணைந்திடலாமெனத் தெரிவி த்துள்ளார். 

இதேவேளை விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவித்து ள்ள ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முழுமையான அமைச்சரவை மாற் றம் குறித்த பரிந்துரைகளை முன் வைப்பதற்காக குழுவொன்றை நியமிக்க வுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இக் குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.