மீட்கப்பட்ட எலும்புகளுக்கும் இராணுவத்திற்கும் நெருங்கிய தொடா்பு - சார்ல்ஸ்
மன்னார் மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு துண்டு களுக்கும் ஸ்ரீலங்கா படைக்குமிடையில் தொடர்பு இருப்பதாக தான் சந்தே கிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எலும்புகள் மீட்கப்ப ட்டதன் தொடர்பில் நீதியான விசா ரணை இடம் பெறுமா எனவும் நாடா ளுமன்ற உறுப்பினர் கேள்வியெழு ப்பியுள்ளார்.
மன்னார் - 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத் தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண், மன்னாரில் உள்ள பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் மன்னார் எமில் நகர் கிராம த்தைச் சேர்ந்த வீடொன்றிற்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அந்த வீட்டின் உரி மையாளர் கடந்த 25ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா்.
இதனையடுத்து அப் பகுதியில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ள அனு மதி வழங்கப்பட்ட நிலையில், இதற்கான நடவடிக்கைகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நடைபெற்றன.
அகழ்வு நடவடிக்கையின் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு த்துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டன.
இந் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளாா்.
இதன் போது, கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எலும்புகள் மீட் கப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டுமென கோரி க்கை விடுத்துள்ளாா்.