அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து பயணிப்பதாக - செல்வம்!
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென நாட்டின் பிர தான கட்சிகள் உட்பட சர்வதேச நாடுகள் வாக்குறுதி வழங்கியதாலேயே அர சாங்கத்துடன் இணைந்து பயணிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நானாட்டான் பிரதேச சபையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளியேறிமையானது, எதிர்காலத் தில் சபையை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றார்கள் என்ற கேள் வியை எழுப்பியுள்ளதாகவும் தெரிவி க்கப்பட்டு ள்ளது.
மன்னார் – நானாட்டான் பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பி னர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ச.லோகேஸ்வரம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை க்கலநாதன் உரையாற்றினார்.
தனது உரையில், நானாட்டான் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு கைப்பற்றியமையானது, ‘இறைவன் கொடுத்த வரம்’ என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வம் அடைக்கலநாதனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்தில் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழர் விடு தலைக்கூட்டணி உறுப்பினர்கள் 8 பேர் வெளி நடப்பு செய்தனர்.
இதற்கு பின் னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளாா்.