காலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிப்பதாக - சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகலயில் நடைபெற்ற புது வ உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில் லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்க ளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்சவின் கையாட்களால் திட்ட மிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டவர்கள் எனவும் முன் னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள 16 உறுப்பினர்களுடன் இணையவுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை பாராளு மன்ற உறுப்பினர் டிலான் பெரேராவிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டு மென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிலான் பெரேரா மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லாதவர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி என்னுடைய காலத்தில் காலில் விழுந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்றவர் டிலான் பெரேரா எனத் தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற பின்னர் வேறு யாரோ போடும் தாளத்திற்கு அவர் நடனமாடுகின்றார். ஒரு காலத்தில் என்னை மிகச் சிறந்த அரசியல்வாதியென வர்ணித்த அவர் தற்போது என்னை காலவதியான நூடில்ஸ் என வர்ணிக்கின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள் ளார்.
காலாவதியான நூடில்ஸ்கள் என வர்ணிக்கப்படுபவர்கள் பத்து பேர் இணைந் தால் உலகையே தலை கீழாக மாற்றிவிட முடியுமென சந்திரிகா தெரிவித்துள் ளார்.
16 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினாலும் தேசிய அரசாங்கம் தொடருமெனத் தெரிவித்துள்ளார்.