புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.!
புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் முன்னெடுக்கப்படுமென அமைச்சரவைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவி னால் எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி இரண்டாவது அமர்வு கூட்டப் பட்டதும் புதிய அரசியல் யாப்பு உரு வாக்கத்துக்கான வழிகாட்டல் குழு கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மேற்கொண்டு வருவ தாகவும் அமைச்சரவைத் தகவல்கள் தெரிவித்துள்ளவேளை எட்டாவது நாடா ளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு கூடும்போது, புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம் மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக செயற்படுகின்றமையினால், கூட்டத் தொடர் முடிவுறுத்தப்பட்டாலும் புதிய அமர்வு ஆரம்பமாகும்போது அரசியலமைப்புச் சபை கூடுவதில் சட்ட ரீதியான பிரச்சினை இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்ற கூட்டத்தொடர், விசேடமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கடந்த 12 ஆம் திகதி முடி வுறுத்தப்பட்டதால், அரச நிறுவனங்கள் பற்றிய தெரிவுக்குழு, அரச கணக்குகள் தொடர்பான தெரிவுக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுக்களின் செயற் பாடுகள் செயலிழந்து காணப்படுகின்றன.