அரசியல் நெருக்கடிக்குள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரைவில் இந்தியா பயணம்.!
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரைவில் இந்தியாவுக்கு பய ணம் ஆகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனிப்பட்ட முறையில், ஆன்மீக பய ணம் ஒன்றை மேற்கொண்டு பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் விக்னே ஸ்வரன், அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் முதல மைச்சர் புதுடில்லிக்கு செல்வார் எனத் தெரிவிக்கின்றன தகவல் வட்டாரங் கள். உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து, மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிடையவுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் அல்லது அடுத்த ஆண்டு ஜன வரி மாதத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக, விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அணியுடன் அல்லது சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான அணியுடன் இணைந்து செயற்படுவது குறி த்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது எதிர்நோக்கியுள்ள அர சியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனிப்பட்ட முறையில், ஆன்மீக விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
இந்தியாவுக்குச் செல்லும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்திப்பாரா இல்லை என்பது குறித்து எதுவும் தெரியாதென, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.