Breaking News

மைத்திரிக்கு இரண்டாவது தோல்வி, ரணிலுக்கு பாடம், சம்பந்தனுக்கு வேதனை

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க வெற்றிபெற்றமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்ட இரண்டாவது பாரிய தோல்வியாகுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. 

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர் தலில், மைத்திரிபால சிறிசேன தலை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த ராஜபக்சவை மையப்படுத் திய அணியிடம் படுதோல்வியடைந் தது.

இந் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, மஹிந்த ராஜ பக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க முற்பட்டு படுதோல்வியடைந்தமை, ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பலவீனம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

 நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததன் மூலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் பிளவுபடுத்தி அரசியல் லாபம் தேடுவதே மஹிந்த ராஜ பக்ச வின் பிரதான நோக்கமாக இருந்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கி ரமசிங்கவை விலக்குவது மஹிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருக்க வில்லை. 

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை அறிந்துகொள்ளாமல், இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சாதகமாக பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்குவதன் மூலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களின் முழு ஆதரவவையும் பெற்றுவிடலாம் என கருதினார். 

அத்துடன் மஹிந்த ராஜபக்ச அணியுடன் இணக்கத்துக்கு வந்து எதிர்கால அர சியலை முன்னெடுக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பி னார். ஆனால் ஜனாதிபதியின் இந்த பலவீனமான அரசியல் நம்பிக்கை, இறுதி யில் அவருடைய அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளதாக தெரிவித் துள்ளனா்.

ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானம், மஹிந்த ராஜபக்சவு க்கு கிடைத்த இரண்டாவது வெற்றிப்படி என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ள னர். அதேவேளை, இன்றில் இருந்து, மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் விரு ம்பாத அரசியல்வாதிகள், அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியேரின் நம்பிக்கைக்குரியவர் என்ற தகுதி யையும் இழந்துள்ளனா். 

மஹிந்த ராஜபக்ச அணியின் நம்பிக்கைக்குரியவராகவும் ஜனாதிபதி மைத்திரி ஒருபோதும் வந்துவிட முடியாது. ஏனெனில், மைத்தரியை அரசியலில் இரு ந்து செல்லாக்காசு ஆக்க வேண்டும் என்பதே மஹிந்தவின் துாரநோக்குச் சிந் தனை. ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சாணக்கியம் அதனை புாிந்துகொள்ள மறுத்தமை தான் ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள் ளனர். 

நம்பிக்கையில்லா பிரேரணை என்ற மஹிந்த ராஜபக்சவின் கயிற்றை, ஜனா திபதி மைத்திரி ஏன் விழுங்கினார் என்றும் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பி யுள்ளனர். அதேவேளை தமிழ் மக்களின் மேலதிக இரண்டு இலட்சம் வாக்குக ளினால் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால், நல் லாட்சி அரசாங்கத்தை இனவாதிகள் ஓரக் கண்ணால் பார்ப்பார்கள் என்று கூறி யதன் மூலமாக தமிழ் மக்களின் நம்பிக்கையையும் அவர் இழந்து விட்டார் என்பது விமா்சனமாகியுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் படிப்பினையாகும். குறிப்பாக தமிழர் விவகார த்தில் கால காலமாக ஏமாற்றி வரும் ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்வரும் கால ங்களில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை மையமாகக் கொண்ட கட்சி அரசி யலில் மாத்திரம் ஈடுபடாமல், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வைக்க வேண்டும் என்ற அவசியத்தை இந்த பிரேரணை வலியுறுத்தியுள்ளது. 

அதேவேளை, பட்டறிவின் அடிப்ப டையில் சிந்திக்காமல் எழுந்தமான மாக ஆதரவு வழங்கும் அரசியலை கைவிட வேண்டும் என்ற செய்தியை யும், ரணில், மைத்திரி. மஹிந்த என்ற தனிநபர்கள், கட்சிகள் என்பதையும் தாண்டி, இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதன் மூலமே, நிர ந்த அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உல கத்துக்கு உணர்த்த வேண்டிய அவசியத்தையும் சம்பந்தனுக்கு இந்த பிரேரணை எடு த்துரைத்துள்ளது. 

இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்ற இந்த உண்மையை, எதிர்வரும் காலங்களில் சம்பந்தனுக்கு மாத்திரமல்ல, அனைத்து தமிழ் தரப்புக்கும் பொறுப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.