நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தலையிடவில்லை - ஜனாதிபதி !
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் தலையிடவே இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி என்ற முறையில் பிரதமர் ரணில் விக்கிகரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சந்தித்ததாகவும், ஆனால் நம்பிக்கையைில்லா பிரே ரணை விவகாரத்தில் எந்த விதமான கருத்துக்களும் முன் வைக்கவில் லையென ஜனாதிபதி தெரிவித்து ள்ளாா்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஊடக வியலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக உரையாடினார்.
இதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.
தமிழ் மக்களில் அனேகமானோர் உட்பட சர்வதேச சமூகமும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், மிகவும் மோசமாக ஆட்சிநடத்திய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர் கட்சி சமர்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையி ல்லா பிரேரணையில் எதற்காக தலையிட்டீர்கள்?
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகத்தானே உங்கள் தலை மையிலான நல்லாட்சி கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஏன் இந்தப் பிரேரணையில் தலையிட்டு உங்கள் மரியாதையை குறைத்துக் கொண்டீர்கள் என சந்திப்பாளா்கள் ஊடான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான எந்த தலையீடுகளும் மேற் கொள்ளவில்லை எனவும், இக் கேள்வி தவறானது என்றும் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, பிரதமர் பதவியிலிருந்து அவரை இரா ஜினாமா செய்யும்படி நீங்கள் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக பேசியிருந்தீர்கள். ஆகவே நீங்கள் நேரடியாக தலை யிடவில்லை என்று எவ்வாறு கூறமுடியும் என மற்றுமொரு கேள்வியை முன்வைத்துள்ளனா்.
இதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி என்ற முறையில் தன்னோடு எவரும் சந்தித்து கலந்துரையாட முடியும் என்றும், அந்த அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவ காரத்தில் பலர் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தாா்.
புதிய அரசியல் யாப்பு எப்போது வெளிவரும் என்றும், இந்த விடயம் உள்ளிட்ட தமிழ் மக்கள் சார்பான பல்வேறு கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்ததாகவும், ஜனாதிபதி என்ற முறையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள் எனவும் மீண்டுமொரு கேள்வியை தொடுக்கப்பட்டதற்கு....,
பதிலளித்த ஜனாதிபதி, புதிய அரசியல் யாப்பு விவகாரம் நாடாளுமன்றத்திற்கு உரியது. நாடாளுமன்றமே அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மிக விரைவில் புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
தொடர்ந்து பதிலளித்த ஜனாதிபதி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுப்பி னர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா கவும், நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையினால் நிர்வாகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரி வித்துள்ளாா்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வொருவருக்கும் பாரிய கடமை உள்ளதாகவும், நாடாளுமன்றத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் எதிர் கால அரசியலை சரியாக நடத்திச்செல்ல முடியுமென ஜனாதிபதி தெரிவித்து ள்ளாா்.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விக ளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய பதில் வழங்கவில்லை என அத்தனை கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதில் வழங்காமல் சிரித்துக்கொண்டு சமாளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.