Breaking News

காட்டிக்கொடுத்து விட்டார் மைத்திரி;ருவிட்டரில் புலம்பிய நாமல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காட்டிக்கொடுக்கும் பழக்கத்தை நேற்று மறுபடியும் உறுதிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ச தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இது தொடர்பில் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டி ருக்கும் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை கடுமை யாக விமர்சித்துள்ளார். 

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காட்டிக்கொடுக்கும் பழக்க த்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான த்தின் ஊடாக மறுபடியும் நிரூபித்து விட்டார். 

இப் பிரேரணைக்கு ஒத்துழைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் களை தூண்டி விட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மாற்றிக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியையும், சுதந்திரக் கட்சியையும் ஜனாதிபதி காட்டிக்கொடுத்து விட்டார் என நாமல் எம்.பி தெரிவித்துள்ளாா்.