Breaking News

வவுனியாவில் இரவு ஐ.தே.க அமைப்பாளர் ரணிலின் வெற்றிக்கு பட்டாசு வெடி !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் வவுனி யாவில் விடுதி ஒன்றின் உரிமையாளா் பிரேமானந்தராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான கருணாதாசவும் பட் டாசு கொழுத்தி கொண்டாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளி னால் நாடாளுமன்றில் தோற்கடிக்க ப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி சபாநா யகரிடம் கையளிக்கப்பட்ட இந் நம்பி க்கையில்லா பிரேரணை மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்க ப்பட்டிருந்தன. இவ் வாக்கெடுப்பில் 26 பேர் கலந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் ரணிலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் வித மாக, வவுனியா நகரப்பகுதியில் (பழைய பேருந்து நிலை யத்தில்) இரவு 11 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.